சினிமா வீடியோ அக்டோபர் 20,2020 | 07:30 IST
'துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை' படங்களில் நடித்த அனு இமானுவல், தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடிக்கிறார். அடுத்து 'மகா சமுத்திரம்' படத்தில் இவரும் ஒரு நாயகியாக இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் சர்வானந்த், சித்தார்த் நடிக்கின்றனர். ஒரு நாயகியாக அதிதி ராவ் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது இன்னொரு நாயகியாக அனு இமானுவல் இணைந்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் உடன் காதலுக்கும் முக்கியத்துவம் உள்ள படமாக இப்படம் தயாராகிறது. இதை அஜய் பூபதி இயக்குகிறார்.
வாசகர் கருத்து