நவராத்திரி வீடியோ அக்டோபர் 21,2020 | 06:10 IST
அரிசி மாவு - 150 கிராம் தேங்காய் பால் - 350 மில்லி சர்க்கரை - 200 கிராம் பால் மற்றும் தண்ணீர் - 375 மில்லி ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை: வெறும் வாணலியில் அரிசி மாவை வறுத்துக் கொள்ளவும்.வென்னீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நெய் ஊற்றி, சிறிது சிறிதாக அரிசி மாவு சேர்த்து மிருதுவாக பிசைந்து, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின், சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருட்டிய அரிசி மாவு உருண்டைகளை பால் மற்றும் மெல்லிய இரண்டாம் தேங்காய் பாலில் வேக வைக்கவும். மாவு வெந்து, பாலின் மேல் கொழுக்கட்டைகள் மிதக்க ஆரம்பித்தவுடன், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்தவுடன், முதல் தேங்காய் பால் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
வாசகர் கருத்து