பொது அக்டோபர் 21,2020 | 15:25 IST
சென்னை நங்கநல்லூர் 45 வது தெரு முனையில் தள்ளுவண்டியில் இருக்கும் ஒரு டிபன் கடை மட்டும் தினமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். கடை ஓனர் 99 வயது கவுசல்யா பாட்டி. அதிகாலை எழுந்து வீட்டிலியே இட்லி , பொங்கல் , கிச்சடி , சாம்பார், சட்னி வகைகளை இரண்டு மணி நேரத்தில் சமைத்து கடைக்கு வந்து விற்பனை செய்ய துவங்குவார். எந்த வயதினர் கடைக்கு வந்தாலும் வா பட்டு , சாப்பிடியா , செல்லம் நல்லா சாப்பிடு என சாம்பாரை பாசமாக பரிமாறுவார். டிபன் சுவை பிடித்து பாட்டி கடைக்கு ஒரு கூட்டம் வந்தாலும் , அன்போடு கொடுக்கும் உணவை சாப்பிடவே ரெகுலர் கஸ்டமர்கள் , பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தினமும் வருகின்றனர்.
வாசகர் கருத்து