Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM | 21-10-2020 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் அக்டோபர் 21,2020 | 19:55 IST

Share

டெட் TET எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, வழங்கப்படும் சான்றிதழ், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின் மீண்டும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த நடைமுறையில், தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இனி, டெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, ஆயுள் முழுவதும் செல்லத்தக்க வகையில் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் நீட்டிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். தமிழகத்தில் 80 ஆயிரம் ஆசிரியர்கள், சான்றிதழ் நீட்டிப்பு கோரி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X