Advertisement

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வைத்தார்

பொது அக்டோபர் 23,2020 | 17:25 IST

Share

தில்லுமுல்லு செய்து சஸ்பெண்ட் ஆன அறநிலைய துறை அதிகாரி, இரண்டு அமைச்சர்களின் வாரிசுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். நேர்மையான நிர்வாகம் நடப்பதாக கூறி வரும் அமைச்சர்கள் இதை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு கோயில் தேசம் என்று பெயர் உண்டு. அத்தனை கோயில்கள் இருக்கின்றன. அவை மூலம் கோடிகளில் வருமானம் வருகிறது. ஆனால் சிலை கடத்தல், ஊழல், முறைகேடு, மோசடி, அரசியல் குறுக்கீடு என்று பல வகையிலும் அற நிலைய துறைக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அதை மாற்ற நேர்மையான அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். ஆனால், அரசியல் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. தவறுக்கு மேல் தவறு செய்யும் சில அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் மட்டத்தில் ஆதரவு இருக்கிறது. இதனால் துறை மீதான களங்கத்தை போக்கும் நடவடிக்கைகள் பலன் தரவில்லை.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X