Advertisement

எலுமிச்சை சாதம்!

நவராத்திரி வீடியோ அக்டோபர் 26,2020 | 06:15 IST

Share

எலுமிச்சை சாதம்! தேவையான பொருட்கள்: பச்சரிசி - 500 கிராம் எலுமிச்சை சாறு - 30 மில்லி கடுகு - 1 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2 துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 ஈர்க்கு பெருங்காயம் - 1 தேக்கரண்டி மஞ்சள் துாள் - 1/2 தேக்கரண்டி வேர்க்கடலை - 50 கிராம் எண்ணெய் - 60 மில்லி கொத்தமல்லி - 1 தேக்கரண்டி செய்முறை: அரிசியை, 20 நிமிடம் ஊற வைத்து, சாதம் வடிக்கவும். வாணலியில், சிறிது எண்ணெய் சூடாக்கி, வேர்க்கடலைமை வறுத்து தனியாக வைக்கவும். பின், அதே வாணலியில் மீண்டும் எண்ணெய் சூடாக்கி காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அடுப்பை அணைத்து விட்டு, பெருங்காயம், மஞ்சள் துாள், எலுமிச்சை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை வடித்த சாதத்தில் சேர்த்து உப்பு, வறுத்த வேர்க்கடலை மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X