நவராத்திரி வீடியோ அக்டோபர் 26,2020 | 06:45 IST
தேவையான பொருட்கள்: பச்சரிசி - 250 கிராம் தயிர் - 250 கிராம் பால் - 60 மில்லி வெண்ணெய் - 50 கிராம் எண்ணெய் - 30 மில்லி கடுகு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 ஈர்க்கு உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 1 பெருங்காயம் - 1 தேக்கரண்டி நறுக்கிய கொத்தமல்லி - 1 தேக்கரண்டி மாதுளை முத்துகள் - 1 மேஜை கரண்டி துருவிய கேரட் - 30 கிராம் ஊற வைத்த முந்திரி - 30 கிராம் உப்பு - தேவையான அளவு செய்முறை: பச்சரிசியை, 20 நிமிடம் ஊற வைத்து, வெண்ணெய் மற்றும் பால் சேர்த்து வேக வைக்கவும். பின், இதை லேசாக மசித்துக் கொள்ளவும். இதில் தயிர், ஊற வைத்த முந்திரி, உப்பு சேர்த்து கலக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்தம் பருப்பு, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிக்கவும். இதை தயிர் சாதத்தில் போட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மாதுளை முத்துக்களுடன், துருவிய கேரட் சேர்க்கவும்.
வாசகர் கருத்து