Advertisement

3 சம்பவம் நடந்தும் திருடன் பிடிபடாத மர்மம்

சம்பவம் அக்டோபர் 26,2020 | 13:53 IST

Share

வேலூர் நகரில் டோல்கேட் அருகே சரக டிஐஜி அலுவலகம் உள்ளது. டி.ஐ.ஜி. ஆபீஸ் பின்புறம் காவலர் குடியிருப்பு உள்ளது. ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதி இது. காவல் கட்டுப்பாடுகளை மீறி, டி.ஐ.ஜி அலுவலக வளாகத்தில் 2 சந்தன மரங்களை யாரோ இரவோடு இரவாக வெட்டி கடத்திச்சென்று விட்டனர். டிஐஜி காமினி உள்ளிட்ட போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொள்ளையர்கள் போட்டு விட்டுப்போன சிறுசிறு கிளைகளை வனத்துறையினர் எடுத்துச் சென்றனர். டிஐஜி ஆபீஸ் வளாகத்தில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவது இது, முதல்முறையல்ல. 2016லும் 2 மரங்கள் திருட்டு போயின. டிஐஜி அலுவலகம் அருகிலுள்ள வேலூர் கலெக்டர் பங்களாவில் 2014ல் 2 பெரிய சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. மூன்று சம்பவங்களிலுமே மர்ம ஆசாமிகள் சிக்கவில்லை. திருட்டு போன சந்தன மரங்களின் மதிப்பு 4 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. சந்தன மரங்கள் தொடர்ந்து திருட்டு போவது பற்றி போலீசாரிடம் கேட்டபோது விசாரித்து வருகிறோம் என ஒரே பதிலையே சொல்கிறார்கள். 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ஒரு வளாகத்தில் திருட்டு நடந்திருப்பது வேலூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. வீரப்பனைப் போல, போலீசுக்கு தண்ணி காட்டும் சந்தன மரக்கொள்ளையன் வேலூரில் இருக்கிறானோ? என கிண்டலாக பேசிக்கொள்கிறார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X