சினிமா வீடியோ அக்டோபர் 29,2020 | 07:25 IST
நவரசா : 9 குறும்படங்களுடன் ஓடிடிக்கு வரும் மணிரத்னம் இரு வாரங்களுக்கு முன்பு அமேசான் ஓடிடி தளத்தில் ஐந்து இயக்குனர்கள் இயக்கிய ஐந்து குறும்படங்களின் தொகுப்பான 'புத்தம் புதுக் காலை' வெளியானது. ஆனால் வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்து நெட்பிளிக்ஸில் மணிரத்னம், ஜெயேந்திரா தயாரித்துள்ள 9 குறும்படங்களை 'நவரசா' என்ற பெயரில் வெளியிடுகின்றனர். அரவிந்த்சாமி, பிஜாய் நம்பியார், கவுதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி.ஆனந்த், பொன்ராம், ரதீந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார்கள். சூர்யா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி உள்ளிட்ட 40 நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ள இந்த குறும்படங்கள் “கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு” ஆகிய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வருமானத்தை சினிமா தொழிலாளர்களுக்கு வழங்க உள்ளனர். மிஸ்.காஜல் அகர்வாலாக கடைசி 2 நாட்கள்… நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிச்லுவை நாளை மறுதினம் (அக்., 30) மும்பையில் திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு முந்தைய வைபவங்கள் காஜல் வீட்டில் ஆரம்பமாகி உள்ளது. சமூகவலைதளத்தில், ''மிஸ் காஜல் அகர்வாலாக கடைசி 2 நாட்கள் என தனது தங்கை நிஷா அகர்வால், நிஷாவின் மகனுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ''எனது கண்களின் 3வது ஆப்பிள், எனது சிறிய பெரிய பேபி. அளவில்லாத அன்பு எது என்பதை எனக்குப் புரிய வைத்ததற்கு நன்றி என தங்கை மகன் இஷான் பற்றியும், என்னுடைய எல்லா விஷயங்களிலும் என்னுடைய பார்ட்னர் தங்கை என நிஷா என குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து