Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 29-10-2020 | Sports News Roundup | Dinamalar

விளையாட்டு அக்டோபர் 29,2020 | 08:00 IST

Share

சென்னை-கோல்கட்டா மோதல் ஐ.பி.எல்., தொடரின் 13 வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் அக்டோபர் 29ம் தேதி நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை, இயான் மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்து விட்ட சென்னை அணி, ஆறுதல் வெற்றிக்கு முயற்சிக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். --------------------------- 25,000 பேருக்கு அனுமதி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்று ஒருநாள், மூன்று 'டுவென்டி-20' மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக தேதிகள் உறுதி செய்யப்பட்டன. நவம்பர் 27ல் ஒருநாள் தொடர் துவங்குகிறது. டிசம்பர் 17ல் அடிலெய்டில் பகலிரவு போட்டியாக, டெஸ்ட் தொடர் துவங்குகிறது. டிசம்பர் 26ல் மெல்போர்னில் துவங்கும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு 25,000 ரசிகர்களுக்கு அனுமதி தரப்படும் என நம்பப்படுகிறது. ---------------------------- ரொனால்டோ இல்லாமல்... ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள மெஸ்சியின் பார்சிலோனா அணி, ரொனால்டோவின் யுவண்டஸ் அணியை சந்திக்கிறது. கொரோனா காரணமாக ரொனால்டோ பங்கேற்க முடியாது என்பதால் இப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ----------------------------- சச்சின் பாராட்டு இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் சகா. ஐ.பி.எல்., தொடரில் டில்லிக்கு எதிராக 45 பந்தில் 87 ரன் குவித்தார். இதுகுறித்து இந்திய அணி 'ஜாம்பவான்' சச்சின் கூறுகையில்,'மிக அழகான பேட்டிங், வேகமாக ரன் குவிக்கும் இவரது திறமை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக உணர்கிறேன்,'' என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X