பொது அக்டோபர் 29,2020 | 12:25 IST
அந்தமான் செல்லும் ஏா்இந்தியா விமானம் சென்னையிலிருந்து இன்று அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டது. 181 பயணிகள், 5 சிப்பந்திகள் இருந்தனர். நடுவானில் பறந்தபோது தான் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக தரையிறக்க தீர்மானித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ரன்வேயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் வேகமாக செய்யப்பட்டன. காலை 6.15 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் கீழே இறங்கியதும் விமானம் பழுதுபார்க்கப்பட்டது. 10.23 மணிக்கு மீண்டும் அந்தமானுக்கு புறப்பட்டது. சரியான நேரத்தில் விமானி தொழில்நுட்பக் கொளாறை கண்டுபிடித்ததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து