Advertisement

பசுமை பண்ணை கடைகளில் தகராறு

சம்பவம் அக்டோபர் 29,2020 | 22:10 IST

Share

100 ரூபாயை தாண்டி வெங்காயம் விற்கிறது. விலை உயர்விலிருந்து மக்களை காக்க அரசே கிலோ 45 ரூபாய்க்கு விற்கிறது. கூட்டுறவு சங்கத்தின் பசுமை பண்ணை கடைகளில் கடந்த ஒரு வாரமாக வெங்காயம் விற்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஒருவருக்கு 2 கிலோ வழங்கப்பட்டது. இப்போது, ஒரு கிலோவாக குறைந்து விட்டது. இதனால் காலையிலேயே பசுமை பண்ணை கடைகள் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சென்னையில் 79 பசுமைப்பண்ணை கடைகள் உள்ளன. ஒரு கடைக்கு 300 கிலோதான் சப்ளை செய்யப்படுகிறது. 1 மணி நேரத்துக்குள் விற்றுத் தீர்ந்து விடுவதால் மக்கள் ஏமாந்து செல்கின்றனர். நல்லது செய்யணும்னு முடிவு செஞ்ச பெறகு, கட்டுப்பாடு எதுக்கு? நிறைய வெங்காயத்தை கொண்டுவந்து வித்தா என்ன? என கேட்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X