Advertisement

கோர்ட் வாசலில் கதறி அழுத பெற்றோர்

பொது அக்டோபர் 31,2020 | 19:05 IST

Share

பாகிஸ்தானில் இந்து மற்றும் சீக்கிய சிறுமிகளை கடத்திச் சென்று முஸ்லிம் மதத்துக்கு மாற்றி கட்டாய திருமணம் செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாக நடக்கிறது. கிறிஸ்தவ சிறுமிகளும் கொடுமையிலிருந்து தப்பவில்லை. கராச்சி ரயில்வே காலனியை சேர்ந்த ஆர்சூ ராஜா என்ற Arzoo Raja 13 வயது கிறிஸ்தவ சிறுமி கடந்த 13ம்தேதி கடத்திச் செல்லப்பட்டாள். பிறகு, கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்துக்கு மாற்றி, 44 வயது நிரம்பிய அலி அசாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியின் குடும்பத்தார் போலீசில் புகாரளித்தனர். விவகாரம் சிந்து மாகாண ஐகோர்ட்டுக்கு போனது. பெண்ணுக்கு 18 வயதாகிறது; சொந்த விருப்பத்தின் பேரில்தான் மதம் மாறி, என்னை திருமணம் செய்து கொண்டாள் என அலி அசார் வாக்குமூலம் அளித்தார். மனைவிக்கு 18 வயதாகிறது என சான்றிதழையும் தாக்கல் செய்தார். அதை கோர்ட் ஏற்றுக்கொண்டு, திருமணம் செல்லும் என்றது கோர்ட். யாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கும் பக்குவமும் வயதும் ஆர்சூ ராஜாவுக்கு இருக்கிறது என நீதிபதி தீர்ப்பில் கூறினார். மகளுக்கு 13 வயதுதான் ஆகிறது என தாய் கோர்ட் முன் கதறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. கோர்ட்டில் தாயை நெருங்கி சென்று ஆர்சூ ராஜா பேச முயன்றபோது, அலி விடாமல் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான். வாய்ஸ் அப் கடந்த ஆகஸ்ட் மாதம் ஃபைசலாபாத் பகுதியில் மரியா ெஷபாஸ் Maria Shahbaz என்ற 14 வயது கிறிஸ்தவ சிறுமியை முகமது நகாஷ் என்பவன் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றான். பிறகு, மதம் மாற்றி கட்டாய திருமணம் செய்தான். இந்த வழக்கு லாகூர் ஐகோர்ட்டுக்கு போனது. மரியா மைனர் என பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. கணவனுடன் சேர்ந்து வாழவும், நல்ல மனைவியாக இருக்கும்படியும் மரியாவுக்கு உத்தரவிட்டார். இதுபோன்ற சம்பவங்களில் குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து வரும் என நினைத்து பெண்களும் கோர்ட்டில் அமைதியாக இருந்து விடுகின்றனர். 2 சிறுமிகளின் கதி என்னவென்று தெரியவில்லை; அவர்களை மீட்டுத்தர கோரி, கராச்சி, லாகூர் நகரங்களில் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்தாலும் அரசியல் தலைவர்களோ, அதிகாரிகளோ, கோர்ட்டோ பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 18 வயதுக்கு குறைவான சிறுமியை மணமுடித்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை என பாகிஸ்தான் சட்டம் கூறுகிறது. அதை அந்நாட்டு கோர்ட்டே மதிக்கவில்லை; பாகிஸ்தானில் இனி சிறுபான்மையினருக்கு இடமில்லை என்ற அவல நிலை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என மனித உரிமை ஆர்வலர் அனிலா குல்சார் வருத்தத்துடன் கூறினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X