Advertisement

இன்றைய விளையாட்டு ரவுண்ட் அட் | 05-11-2020 | Sports News Roundup | Dinamalar

விளையாட்டு நவம்பர் 05,2020 | 06:50 IST

Share

பைனல் வாய்ப்பு யாருக்கு ஐ.பி.எல்., தொடரின் பிளே ஆப் போட்டிகள் துபாயில் துவங்குகின்றன. இங்கு நடக்கும் தகுதிச்சுற்று 1ல் ரோகித் சர்மாவின் மும்பை, ஸ்ரேயாசின் டில்லியை சந்திக்கிறது. இதில் வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். -------------- காலிறுதியில் ராமநாதன் ஜெர்மனியில் ஆண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன், ஜப்பானின் மோரியாவை 7-6, 6-4 என்ற நேர் செட்களில் வென்று, காலிறுதிக்கு முன்னேறினார். -------------- வெல்லுமா மந்தனா அணி பெண்கள் 'டுவென்டி-20' சாலஞ்ச் தொடர் சார்ஜாவில் நடக்கிறது. இதன் இரண்டாவது போட்டியில் மிதாலி ராஜின் வெலாசிட்டி அணி, ஸ்மிருதி மந்தனாவின் டிரையல்பிளேசர்ஸ் அணியை சந்திக்கிறது. கடந்த தொடரில் ஏமாற்றிய மந்தனா அணி இம்முறை சாதிக்க முயற்சிக்கலாம். --------------- மாரடோனாவுக்கு ஆப்பரேஷன் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா 60. அர்ஜென்டினாவை சேர்ந்தவர். உடல்நலம் சரியில்லாமல் பியுனஸ் ஏர்ஸ் மருத்துமனையில் சேர்க்கப்பட்ட இவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவர, உடனடியாக ஆப்பரேஷன் செய்து அகற்றப்பட்டது. தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X