சம்பவம் நவம்பர் 05,2020 | 19:30 IST
ஐதராபாத்தில் உள்ள அபிட்ஸ் Abids பகுதியில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதில் ஒரு ஆம்புலன்ஸ் சிக்கியது. அதைப் பார்த்த டிராபிக் போலீஸ் பாப்ஜி Babji ஆம்புலன்ஸ்க்கு வழி விடும்படி வாகன ஓட்டிகளிடம் கூறிய படியே ஓடினார். இதனால் டிராபிக் க்ளியராகி ஆம்புலன்சுக்கு வழி கிடைத்தது. 2 கிலோ மீட்டர் தூரம் இப்படியே ஓரம்போங்க ஓரம்போங்கனு சத்தம் போட்டுக்கொண்டே ஓடி போக்குவரத்து சீர்செய்தார். ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியை சேர உதவினார். வாய்ஸ் அப் வைக்கவும் தனது போலீஸ் நிலைய எல்லையையும் தாண்டிச் சென்று ஆம்புலன்ஸ்க்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த கடமை வீரன் பாப்ஜியின் மனிதநேயத்தை ஐதராபாத்வாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
வாசகர் கருத்து