சினிமா வீடியோ நவம்பர் 08,2020 | 07:22 IST
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் 232வது படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு உடன் கூடிய டீசரை அவரின் பிறந்தநாளான இன்று வெளியிட்டனர். படத்திற்கு விக்ரம் என பெயரிட்டுள்ளனர். வித்தியாசமான முறையில் வெளியாகி உள்ள இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. டீசரை பார்க்கும்போதே இது அதிரடி, ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது. 1986ல் ராஜசேகர் இயக்கத்தில் கமல் நடிப்பு, தயாரிப்பில் 'விக்ரம்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து