சினிமா வீடியோ நவம்பர் 09,2020 | 07:20 IST
சிம்புவா இது? தன்னுடைய சொந்தப் படத் தயாரிப்புக்கே சரியாக ஒத்துழைப்பு தராதவர் என பெயர் எடுத்தவர் நடிகர் சிம்பு. ஆனால் சமீபகாலமாக அவரிடம் பெரிய மாற்றம். இந்த கொரோனா சமயத்திலும் மிக மிகக் குறுகிய காலத்தில் 'ஈஸ்வரன்' படத்தில் நடித்துக் கொடுத்து முடித்திருக்கிறார். அக்டோபர் முதல் வாரத்தில்தான் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது. ஒரு மாதத்திலேயே அவருடைய காட்சிகள் அனைத்தையும் படமாக்கிவிட்டார்கள். சிம்பு படத்திற்கான டப்பிங்கையும் பேசிக் கொடுத்துவிட்டார். இதனால் சிம்புவை பார்த்து தமிழ்த் திரையுலகம் ஆச்சரிய அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு டீசரும், பொங்கல் தினத்தில் படமும் வெளியாக உள்ளது. காப்பி சர்ச்சையில் 'விக்ரம்' டீசர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வெளியான கொஞ்ச நேரத்திலேயே இந்த டீசர் ஒரு காப்பி என சமூக வலைத்தளங்களில் சர்ச்சை வெளியானது. நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள 'நார்கோஸ் மெக்சிகோ' வெப் தொடர் சீசன் 2 டீசரைக் கொஞ்சம் மாற்றி 'விக்ரம்' பட டைட்டில் டீசராக வெளியிட்டுவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'நார்கோஸ் மெக்சிகோ சீசன் 2' டீசரின் அரங்க அமைப்பு, நீளமான உணவருந்தும் மேஜை, அடியில் ஆயுதங்கள், லைட்டிங் என அனைத்தும் 'விக்ரம்' டீசரில் அப்படியே இடம் பெற்றுள்ளது.
வாசகர் கருத்து