சினிமா வீடியோ நவம்பர் 11,2020 | 07:22 IST
தீபாவளிக்கு தியேட்டரில் படங்கள் ரிலீஸ் கொரோனாவால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. விபிஎப் பிரச்னைக்கு முடிவு கிடைக்காமல் புதிய படங்களை திரையிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ளனர். இதனால் பழைய படங்களை திரையிட்டுள்ளனர். இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு விபிஎப் கட்டணங்களை வசூலிப்பதில்லை என டிஜிட்டல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் இரண்டு வாரங்களுக்கு மட்டும் படங்களை திரையிடுவதாகவும், அதேசமயம் விபிஎப்., கட்டணத்தை செலுத்தி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்த தீபாவளிக்கு ஆபாச படமான 'இரண்டாம் குத்து, தட்றோம் தூக்கறோம், மரிஜுவானா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதுதவிர களத்தில் சந்திப்போம் வெளியாகும் என தெரிகிறது. இவற்றுடன் ஓடிடியில் சூர்யாவின் சூரரைப்போற்று, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படங்கள் வெளியாகின்றன.
வாசகர் கருத்து