சம்பவம் நவம்பர் 12,2020 | 17:40 IST
ஐக்கிய அரபு நாடுகளின் தூதரகத்தில் பெயரில் வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டது, இந்த விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் சிறையில் உள்ளனர். ஸ்வப்னா உடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள மாநில முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது, மத்திய புலனாய்வு அமைப்பு, சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் தனித்தனியாக விசாரணை நடத்திவருகின்றனர். இதில் அமலாக்கத்துறையின் விசாரணையில் ஸ்வப்னாவின் வாக்குமூலம் பல பெரிய மோசடிகளை வெளிகொண்டுவந்துள்ளது, சிவசங்கர் மற்றும் அவரது குழுவினருக்கு தெரிந்தே தங்க கடத்தல் நடந்தது உறுதியானது. இது தொடர்பாக இருவரும் பேசிக்கொண்ட வாட்ஸ்அப் தகவல்கள் ஆதாரங்களாக சேமிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து