சினிமா வீடியோ நவம்பர் 13,2020 | 07:20 IST
மீண்டும் தூசி தட்டப்படும் மருதநாயகம்? நடிகர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம், கடந்த 1997ல் தொடங்கப்பட்டு, நிதி பிரச்னையால் கைவிடப்பட்டது. சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் இப்படத்தை மீண்டும் தொடங்கும் முயற்சியில் கமல் ஈடுபட்டார். ஆனால் அது கைக்கூடவில்லை. இந்நிலையில் மருதநாயகம் படத்தை மீண்டும் தொடங்க கமல் முடிவு செய்திருக்கிறாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. கமலுக்கு பதில் இப்படத்தில் விக்ரம் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. அது நிஜமாகும் என தெரிகிறது. பைரசியில் முதலில் வெளியான 'சூரரைப் போற்று' முன்பெல்லாம் தியேட்டர்களில் படம் வெளியான சில மணி நேரங்களில் தான் பைரசி இணையதளங்களில் படங்கள் வெளியாகும். ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே பைரசி தளங்களில் வெளியாகி அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றன. அது நேற்று வெளியான 'சூரரைப் போற்று' படத்திற்கும் நடந்தது. இப்படத்தை சில நாடுகளில் மட்டும் முன்னதாக வெளியிட்டார்கள். அதனால், இந்தியாவில் இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே பைரசி இணையதளங்களில் வெளியானது. மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களான ஓடிடி தளங்களால் கூட பைரசி தளங்களை முடிக்க முடியவில்லை. 6 வயதிலேயே கம்போஸரான ஜிப்ரான் மகன் வாகை சூட வா படம் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். முதல் படத்திலேயே இனிமையான பாடல்களால் கவனத்தை ஈர்த்தார். அப்படத்தைத் தொடர்ந்து கமலின் உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம் என ஜிப்ரானின் இசை பெரிதும் பேசப்பட்டது. இவரின் ஆறு வயது மகன் ஒரு பாடலை கம்போஸ் செய்து பாடியுள்ளார். 'மாஸ்க்க காணும்' என்று தொடங்கும் இந்த பாடலின் புரமோ வீடியோவை ஜிப்ரான் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதன் முழு பாடல் குழந்தைகள் தின சிறப்பு பாடலாக நவம்பர் 13ல் வெளியாகிறது.
வாசகர் கருத்து