சிறப்பு தொகுப்புகள் நவம்பர் 15,2020 | 23:55 IST
காங்கிரசுடன் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது திமுகவுக்கு. தொற்று பாதிக்காமல் இருக்க அது ஒன்றுதானே வழி? தோழமை கட்சியுடன் உள்ள உறவை கொச்சை படுத்துவதா? என்று அழகிரி ஆத்திரம் கொள்ளக்கூடும். உண்மையில் காங்கிரசுடன் சமூக இடைவெளி அவசியமாகி விட்டது என்ற குரல் கேட்டதே அறிவாலயத்தில்தான் என்று சொன்னால் அவர் அமைதியாகி விடுவார். அரசியல் சம்பிரதாயப்படி இரண்டு தரப்பும் மறுக்கலாம். அதனால் உண்மை பொய்யாகி விடாது. பிகார் தேர்தல் ரிசல்ட் வந்த நேரத்திலேயே திமுகவில் சலசலப்பு தொடங்கி விட்டது.
வாசகர் கருத்து