சம்பவம் நவம்பர் 16,2020 | 20:52 IST
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் 'கருப்பன் குசும்புக்காரன்' என வசனம் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நடிகர் தவசி. கிழக்கு சீமையிலே தொடங்கி, அண்ணாத்த வரையில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தமிழ் படங்களில் காமெடி, குணச்சித்திரம் என சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் கலக்கியவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருக்கிறார். முறுக்கு மீசையுடன் சரளமாக வசனம் பேசி நடித்தவர், பேசக்கூட தெம்பில்லாமல் இருக்கிறார். மருத்துவச் செலவுக்கு உதவி செய்யும்படி சக நடிகர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுக்கிறார். #ActorThavasi #ThavasiCancer #KaruppanKusumpukaran
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
மேலும் 1 கருத்துக்கள்...