Advertisement

டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் பாராட்டு | Quick Reaction Surface-to-air Missile

பொது நவம்பர் 17,2020 | 21:05 IST

Share

எதிரி நாட்டு விமானங்கள், ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் விரைவு எதிர்வினை ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்திய வான் எல்லையை பாதுகாக்கும் நோக்குடன் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. ஒடிசாவில் உள்ள பாலசோர் கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, நடுவானில் பறந்த ஆளில்லா விமானத்தை துல்லியமாக தாக்கி அழித்தது. நிலத்தில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை, வானில் 30 கிலோ மீட்டர் தூரம் வரையில் உள்ள வான் இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது. ஏவப்பட்ட பிறகு வானில் எதிரிநாட்டு விமானத்தை கண்டுபிடித்து பின் தொடர்ந்து சென்று தாக்கும் திறனும் இந்த ஏவுகணைக்கு உண்டு.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X