அரசியல் நவம்பர் 19,2020 | 15:05 IST
காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா? என்ற கேள்வி நாலா பக்கமும் கேட்கிறது. இது அந்த கட்சியின் அதிர்ஷ்டம். ஆளே இல்லாத ஓட்டலில் டீ போடும் மாஸ்டர்தான் நினைவுக்கு வருகிறார். ஆட்சியை பறி கொடுத்த பின் 53 ஆண்டுகளாக நாற்காலி இல்லாமல் தவிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ். அப்படி பரிதாப நிலையில் இருக்கும் கட்சியை ஒரு அணியின் தலைவனாக கற்பனை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் என்றால் அது ஆண்டவனின் கிருபை அன்றி வேறென்ன? பிகார் தேர்தலில் மகா கூட்டணிக்கு நேர்ந்த கதியை பார்த்து திமுக மிரண்டு போயிருப்பது கதையல்ல நிஜம். ஆனால் காங்கிரசை கழற்றி விடுவதற்கான தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை என்பதும் உண்மை. இதற்கு காரணம் தனித்து நின்று ஒரு இடம் கூட ஜெயிக்க துப்பில்லாத காங்கிரஸ் கட்சியால் 43 சட்டசபை தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு வேட்டு வைக்க முடியும் என்பதுதான். இந்த மதிப்பீடு ஊடகங்களின் சொந்த சரக்கு அல்ல. திமுக தலைமையே கணக்கெடுப்பு நிறுவனங்கள் மூலமாக நடத்திய ஆய்வில் ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல். வெறும் ஆறு சதவீதம் ஓட்டுகளை மட்டுமே வைத்திருக்கும் கட்சியால் இது சாத்தியமா என்று கேட்டால், நிச்சயமாக சாத்தியம் என்கிறார்கள் தேர்தல் கணிப்பு கள ஆய்வாளர்கள். திருச்சியில் தொடங்கி கன்னியாகுமரி வரையிலான தென் தமிழகத்தில் காங்கிரசின் வேரின் எச்சங்கள் அந்தளவுக்கு இன்னும் பரவிக் கிடக்கிறதாம்.
வாசகர் கருத்து (5) வரிசைப்படுத்து:
மேலும் 4 கருத்துக்கள்...