Advertisement

படிப்பு செலவு முழுவதையும் ஏற்றார்

பொது நவம்பர் 20,2020 | 14:55 IST

Share

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி அரசு பள்ளியில் படித்த 303 மாணவ மாணவிகளுக்கு எம்பிபிஎஸ் சீட்கள் கிடைத்துள்ளது. கரூர் அரசு பள்ளியில் படித்த செல்வன் மாரிமுத்து நீட் தேர்வில் 297 மார்க் எடுத்திருந்தார். உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் கரூர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க செல்வன் மாரிமுத்துவுக்கு சீட் கிடைத்தது. செல்வன் மாரிமுத்துவின் குடும்பம்- வறுமையில் வாடுகிறது. தந்தை சுப்பிரமணி சைக்கிளில் குச்சி ஐஸ்  வியாபாரம் செய்கிறார்.  கல்லூரி கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில் செல்வன் மாரிமுத்து இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்விப்பட்டார். மாணவனை அழைத்து பாராட்டினார். எம்பிபிஎஸ் முடிக்கும் வரை கல்லூரிக்கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக மாணவனிடம் உறுதியளித்தார். முதலாம் ஆண்டு கட்டணம் 20,000 ஆயிரம் ரூபாயை மாணவனிடம் வழங்கினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X