பொது நவம்பர் 20,2020 | 18:20 IST
கொரோனா மரணங்களை தடுக்கும் சக்தியுடையது என பெயர் வாங்கியது ரெம்டிசிவர் மருந்து . இப்போது எவ்வளவு சீரியஸ் நிலையில் இருந்தாலும் நோயாளிகளுக்கு கொடுக்க கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கில்லெட் நிறுவனம் தயாரித்த ரெம்டிசிவர் மருந்தை பரிசோதனை செய்த பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுபாட்டு துறை அனுமதி வழங்கியது . ஒரு நோயாளியின் ஜந்து நாள் சிகிச்சைக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை ரெம்டிசிவர் விற்பனை செய்யப்பட்டது . டிரம்ப் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த போது ரெம்டிசிவர் மருந்து கொடுக்கப்பட்டது .
வாசகர் கருத்து