பொது நவம்பர் 23,2020 | 09:45 IST
பலவேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தார். விழாவில் தமிழகத்தில் வாரிசு அரசியலை ஒழிப்போம் என கூறினார். இதற்கு பதிலளித்த திமுக பொதுச்செயலாளர் நாட்டில் பல்வேறு தலைவர்கள் வாரிசு அரசியல் செய்வதாக தெரிவித்தார். அப்போது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தந்தையும் எம்.பி என தவறான தகவலை தெரிவித்துள்ளார். லேக்சபா உறுப்பினரும், உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினருமான மஹந்த அவைத்யநாத்தின் மகன் தான் யோகி ஆதித்யநாத் என்ற தவறான தகவல் சமூக ஊடகங்ளில் பரவி வருகிறது. துரை முருகன் இந்த தகவலின் அடிப்படையிலே பேசி இருக்க வேண்டும். உண்மையில் யோகி ஆதித்யநாதின் இயற் பெயர் அஜய்மோகன் பிஸ்ட். யோகி ஆதித்யநாத் என்பது துறவியானதும் பீடாதிபதி அபிஷேக பெயர். இவரது தந்தையின் பெயர் ஆனந்த் சிங் பிஸ்ட், வனதுறை அதிகாரி. கோரக்கநாதர் மடத்தின் முந்தைய பீடாதிபதி மகந்த் அவைத்தியாநாத்தின் பின் அடுத்த தலைவராக வந்தவர் அவரது சிடர் முதல்வர் யோகி.
வாசகர் கருத்து