Advertisement

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை

பொது நவம்பர் 24,2020 | 17:42 IST

Share

நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிவர் புயல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை விடப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள். புயிலின் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். மழையின் அளவை பெறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிகளின் கரைகளை பலப்படுத்த மணல் மூட்டைகள் தயார்நிலையில் வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து சென்றுவிட்டது என அறிவிக்கப்படும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் கேட்டுகொண்டுள்ளார்.


வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Sowrirajan Pathravi
Sowrirajan Pathravi , இந்தியா. 15-டிச-2020 | 08:08:44 IST Report Abuse

good idea. implementation is required

Rate this:
Reply

மேலும் 2 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X