பொது நவம்பர் 25,2020 | 07:56 IST
இன்று இரவு கரையை கடக்கும் வங்க கடலில் உருவாகியுள்ள 'நிவர்' புயல், அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று இரவு 'நிவர்' புயல் கரையை கடக்கிறது. நாகை, காரைக்கால், கடலுார், திருவாரூர் மாவட்டங்களில் 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து