பொது நவம்பர் 25,2020 | 08:32 IST
வங்க கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வங்கதேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாயலாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கி அரபு எமிரேட்ஸ், ஏமன் உள்ளிட்ட 13 நாடுகள் இணைத்து பெயர் வைப்பார்கள். உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இதர அமைப்புகளின் வழிமுறைகளில் இந்த பெயர் தேர்வு செய்கின்றன. ஒவ்வொரு நாடு சுமார் 13 பெயர்களை பரிந்துரை செய்கிறது. இந்த பெயர்களை வைக்க நிபந்தை உள்ளது. அரசியல், கலாச்சாரம், மத நம்பிக்கை கலக்காத பொதுவாக ரிஉக்க வேண்டும். உலகரங்கில் மக்கள் மனதை புண்படுத்ஹும் நோக்கில் இருக்கக்கூடாது. அதிகபட்ச 8 எழுத்துகள்தான் லிமிட். எளிதில் உச்சரிக்கும்படி இருக்க வேண்டும். அதேபோல் வட இந்திய பெருங்கடலில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள் மீண்டும் பயன்படுத்த முடியாது. தற்போது இருகும் பட்டியலின்படி நிவர் என்ற பெயர் ஈரான் பரிந்துரை செய்த பெயர். இதற்கு தற்காப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை என அர்த்தம். 2020ல் உருவாக்கப்பட்ட புதிய பட்டியலின் அடிப்படையில் அடுத்த 25 வருடங்களில் வரப்போகும் புயலுக்கான பெயர் பட்டியல் உலக வானிலை ஆராய்சி மையத்திடம் ரெடியாக உள்ளது.
வாசகர் கருத்து