பொது நவம்பர் 25,2020 | 13:00 IST
தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிவர் நாளை அதிகாலை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு கடுமையாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், போ புயலே போய்விடு என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை தீட்டியுள்ளார். போ புயலே போய்விடு பச்சைமரம் பெயர்த்துப் பல் துலக்காமல் வேய்ந்தவை பிரித்து விசிறிக் கொள்ளாமல் குழந்தையர் கவர்ந்து கோலியாடாமல் பாமர உடல்களைப் பட்டம் விடாமல் சுகமாய்க் கடந்துவிடு சுவாசமாகி விடு ஏழையரின் பெருமூச்சை விடவா நீ பெருவீச்சு வீசுவாய்? என வைரமுத்து கவீதை எழுதியுள்ளார்.
வாசகர் கருத்து