பொது நவம்பர் 25,2020 | 16:00 IST
நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 1 மணிக்கே பஸ் சேவையை நிறுத்த கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். மக்களின் நலன் கருதி, இன்று அனைத்து கடைகளை மூட உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் காய்கறி அங்காடிகளும் மூடப்பட்டன. பஸ் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் டெப்போக்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பஸ் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடின.
வாசகர் கருத்து