பொது நவம்பர் 25,2020 | 16:10 IST
திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் பெய்யும் மழை நீர் அங்குள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் திருக்குளத்திற்கு செல்லும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதி, சன்னதி தெரு, செட்டி தெரு ஆகிய தெருக்களில் கால்வாய்களில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நின்றது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மாநகராட்சி ஊழியர்கள் வரும் வரை காத்திருக்காமல் தாங்களே அடைப்புகளை சரி செய்தனர். இதையடுத்து, தெருக்களில் தேங்கி நின்ற மழைநீர் கோவில் குளத்தை தடையின்றி சென்றடைந்தது. குளத்தின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது
வாசகர் கருத்து