பொது நவம்பர் 25,2020 | 17:45 IST
சென்னை வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் தண்டவாளத்தை கடந்து பொது மக்கள் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அங்கு, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் மழைநீர் நிரம்பி விட்டது. சுரங்கப்பாதைக்கு மேலே 10 அடி நீளத்துக்கு தண்டவாளம் கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். தொடர் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டதால் தண்டவாளம் கீழே இறங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, கருங்கற்களை கொட்டி தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தண்டவாளம் சரிசெய்யப்படும் என அதிகாரிகள் கூறினர். நிவர் புயல் காரணமாக இன்று சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து