பொது நவம்பர் 25,2020 | 18:21 IST
நிவர் புயல் காரணமாக சென்னையில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தன. மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் கடமை உணர்வுக்கு தலைவணங்குவதாக முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல, சென்னையில் சாலையில் விழுந்த மின் கம்பங்களை உடனுக்குடன் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மின்துறை பணியாளர்களையும் முதல்வர் பாராட்டினார்.
வாசகர் கருத்து