சினிமா வீடியோ நவம்பர் 26,2020 | 07:25 IST
தலைப்பு : தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முறைகேடு என குற்றச்சாட்டு ரெஜினாவின் 'பிளாஷ்பேக்' சூர்ப்பனகை படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் ரெஜினா அடுத்து 'பிளாஷ்பேக்' என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், . கொரில்லா படத்தை இயக்கிய டான் சேண்டி இயக்குகிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். அழகிய காதல் கதையாம். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் தயாரிக்கிறார். சென்னையில் இதன் படப்பிடிப்பு துவங்கியது. வெளியே செல்ல வேண்டாம்: பார்த்திபன் நிவர் புயல், சென்னை மழை குறித்து நடிகர் பார்த்திபன் டுவிட்டரில், ''ஊசி வெடி சத்தத்தின் அளவில் இடி சத்தம் கேட்டாலும், சித்தம் கலங்கி, அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு காரிலேயே ஓடிப் போவேன். அடுத்த இடியில் இந்த லோகம் அழிந்து விட்டால் மனைவி மக்களுடனே மடிந்து விட வேண்டும். சாவிலும் பிரிந்திருக்கக் கூடாது என்ற அறிவு+அர்த்தங்கெட்ட வேகமது. வர்தாவை விட வேகத்தில் வருதாம் நிவர். அவசியமின்றி வெளி செல்ல வேண்டாம். கடந்தே தீரும் எதுவும்/இதுவும்!'' என பதிவிட்டுள்ளார். அரசியலில் இறங்கும் மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி, அதன்பின் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய பல பதிவுகளைப் பதிவிட்டு செய்திகளில் அடிபட்டார் நடிகை மீரா மிதுன். திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்ததைப் பற்றி டுவிட்டரில், “அரசியல் உலகத்திற்குள் நான் நுழைவதை முன்னிட்டு கடவுள் பாலாஜியிடம் ஆசி பெற்றேன். திருப்பதியில் இருப்பது புத்துணர்வாக உள்ளது. கோயில் நகரத்தை சுத்தமாக வைத்திருக்கும் ஜெகனுக்கு சல்யூட்,” எனக் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து