செய்திச்சுருக்கம் நவம்பர் 26,2020 | 07:55 IST
வங்ககடலில் அதிதீவிர புயலாக உருவான 'நிவர்'புயல், நேற்றிரவு 11.30 முதல் அதிகாலை 2.30 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. 120 முதல் 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தீவிர புயமாக மாறிய நிவர், படிப்படியாக வலுவிழக்கும் என்றும், வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நிவர் புயல் காரணமாக கடலூரில் நள்ளிரவில் 24.4 செ.மீ., மழை பதிவானது. புதுச்சேரியில் 22 செ.மீ., சென்னையில் 8.9 செ.மீ. மழை பதிவானது.
வாசகர் கருத்து