பொது நவம்பர் 26,2020 | 08:32 IST
மக்கள் பாதுகாப்பாக இருக்க முதல்வர் அறிவுறுத்தல் புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை கொட்டியது. சாலைகள், தாழ்வான இடங்கள் உட்பட நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பலத்த காற்றின் காரணமாக சில இடங்களில் மரங்கள் விழுந்தன. புயல் கரையை கடக்கும்போது, மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருந்ததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என்று முதல்வர் நாராயணசாமி கூறினார். கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் பத்திரமாக திரும்பிவிட்டதாக அவர் சொன்னார்.
வாசகர் கருத்து