பொது நவம்பர் 26,2020 | 13:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயலால் நேற்று நாள் முழுவதும் தொடர் மழை பெய்தது. இப்போதும் லேசான மழை தொடர்கிறது. தாழ்வான பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. செய்யாறு மற்றும் அதை சுற்றியுள்ள புரிசை, எச்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயரிடப்பட்டிருந்த 10ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள், அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர். அரசு இழப்பீடு தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து