சம்பவம் நவம்பர் 26,2020 | 13:00 IST
விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி. இவருக்கு இரண்டு மனைவிகள். அதனால் அருகருகே 2 வீடு கட்டியுள்ளார். முதல் மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகன் ஆதி ஆகியோர் நேற்று ஓட்டு வீட்டில் தூங்கினர். கடந்த சில நாட்களாக பெய்த மழையில் வீட்டின் சுவர்கள் ஊறிப்போயிருந்தன. இன்று அதிகாலை புயல் கரையை கடந்தபோது சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி, மகன் ஆதி மீது விழுந்தது. பக்கத்து வீட்டில் இருந்த கந்தசாமி மற்றும் 2வது மனைவி சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இடிபாடுகளை அப்புறப்படுத்தி ராஜேஸ்வரி, ஆதியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் ராஜேஸ்வரி உயிரிழந்தார் ஆதிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து