பொது நவம்பர் 26,2020 | 13:52 IST
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, தரமணி, ஆதம்பாக்கம் பகுதிகளை துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு செய்தார். மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், நிவாரண பொருட்களையும் வழங்கினார். சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூரில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி, புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
வாசகர் கருத்து