Advertisement

பாகிஸ்தானில் இருந்து கம்போடியா பறக்கிறான் காவன்

பொது நவம்பர் 27,2020 | 11:25 IST

Share

சுவரில் தலையை முட்டி சோகத்தில் நிற்கும் இந்த யானையின் புகைப்படத்தை பலரும் பார்த்திருப்போம். உலகின் தனிமையான, சோகமான யானை என அழைக்கப்படும் இந்த யானையின் பெயர் காவன். யானைகளே இல்லாத பாகிஸ்தான், 1985ம் ஆண்டு இலங்கையிடம் இருந்து ஒரு வயதான காவன் என்ற யானைக்குட்டியை பெற்றது. இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் காவன் வளர்க்கப்பட்டான். காவனுக்கு துணையாக 1990ல் சஹோலி என்ற பெண் யானை வரவழைக்கப்பட்டது. ஆசிய யானைகள் பெரும்பாலும் மிதமான வெப்ப நிலையில் வாழ கூடியவை. பாகிஸ்தானின் கடும் வெப்பம் யானைகளுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. இதனால் சஹோலி யானை மரணமடைந்தது. ஜோடியாக சுற்றித்திரிந்த காவன், சஹோலியின் இறப்புக்கு பின்னர் தனிமையில் வாடியது. யானைகள் பெரும்பாலும் கூட்டம் கூட்டமாக வசிப்பவை, உருவத்தில் பெரிது என்றாலும் அவை குழந்தைகள், மனிதர்கள் போல் தனிமை, சோகம், மன உலைச்சல் போன்ற உணர்வுகள் யானைக்கும் உள்ளது. மன உலைச்சலில் காவன் மூர்கமாக நடந்துகொண்டான். பாதுகாப்பு கருதி தனிமையில் சிறைப்படுத்தப்பட்டான்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X