பொது நவம்பர் 27,2020 | 12:25 IST
நிவர் புயலின் தாக்கத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. குறிஞ்சிப்பாடி அடுத்த திருவெண்ணைநல்லூர் பகுதியில் பறவனாறிலிருந்து மழைநீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததால், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் மூழ்கின. தண்ணீர் வடிவதற்கு உரிய வடிகால் வசதி இல்லாததால் நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து