செய்திச்சுருக்கம் நவம்பர் 28,2020 | 08:00 IST
தமிழகத்தில், நிவர் புயலுக்கு நான்கு பேர் இறந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்சம், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் என, மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புயல் பாதிப்பு பற்றி முதல்வரிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து