சம்பவம் நவம்பர் 28,2020 | 11:50 IST
நிவர் புயலின் காரணமாக குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் உள்ள குடிசை வீட்டில் முனியப்பன், எல்லம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். முனியப்பன் வெளியூர் சென்றிருந்த நிலையில், எல்லம்மாள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினார். நடு ஆற்றில் தவித்த எல்லம்மாள், காப்பாற்றும்படி கூச்சலிட்டார். குடியாத்தம் தீயணைப்பு துறையினர் மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எல்லம்மாள், குடிசையை வெள்ளம் சூழ்ந்ததால், அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ட்ரோன் கேம்ரா உதவியுடன், எல்லம்மாள் கண்டுபிடிக்கப்பட்டு, ரப்பர் படகு மூலம் அதிகாரிகள் மீட்டு வந்தனர். வெள்ளம் வருமுனு நினைக்கல, அதனால வீட்டிற்குள்ளேயே இருந்ததாக வெள்ளந்தியாக கூறினார் எல்லம்மாள்.
வாசகர் கருத்து