செய்திச்சுருக்கம் நவம்பர் 28,2020 | 13:02 IST
தமிழகத்தில் தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கு 30ம் தேதி முடிகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைள் தளர்வுகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளால், நிவர் புயலால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது என்றார். அர்பணிப்போடு பணியாற்றி அரசு அதிகாரிகள், பணியாளர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். பயிர் சேதம் கணக்கிடப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படும். வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நிரந்தர தீர்வு காண உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்
வாசகர் கருத்து