பொது நவம்பர் 29,2020 | 15:30 IST
தலையில் ஏற்படும் சிறு காயங்கள் கூட மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் மறதி நோயை தரலாம். மரணத்துக்கும் இட்டுச் செல்லலாம். இந்தியாவில் 2019ல் நடந்த சாலை விபத்துகளில் 1 லட்சத்து 54 ஆயிரம் பேர் இறந்தனர். இவர்களில் 56,000 பேர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள். 56,000ல் 43,600 பேர் ெஹல்மெட் அணியாமல் சென்றார்கள். பல இடங்களில் பார்த்திருப்போம். சாலையோரத்தில் ெஹல்மெட்டுகளை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். 200, 300 ரூபாய்க்கு கூட கிடைக்கும். இவைகள், பெரும்பாலும் தரமற்ற ெஹல்மெட்தான். ஐஎஸ்ஐ, பிஐஎஸ் தர முத்திரைகளை போலியாக போட்டு ெஹல்மெட்டுகளை அதிக விலைக்கு விற்பவர்களும் உண்டு. டிராபிக் போலீசிடம் இருந்து தப்புவதற்காக, இந்த தரமற்ற ெஹல்மெட்டை டூவீலர் ஓட்டிகள் வாங்கி போட்டுக் கொள்வது வாடிக்கை. சிலர் பிளாஸ்டிக் தொப்பிகளை வாங்கி அணிந்து செல்கிறார்கள்.
வாசகர் கருத்து