செய்திச்சுருக்கம் நவம்பர் 30,2020 | 07:52 IST
நடிகர் ரஜனிகாந்த், தமது மக்கள் மன்ற செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் கூட்டம் நடக்கிறது. ரஜினியின் உடல்நிலை காரணமாக அவர் அரசியலுக்கு வருவதில்லை என்று சில தினங்களுக்கு முன் தகவல் பரவியது. உடல்நிலைப்பற்றிய தகவல் உண்மை என்றாலும், அரசியல் நிலைப்பாடு பற்றி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்பேன் என ரஜினி கூறியிருந்தார். எனவே, அது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பதை கூட்டத்திற்கு பின் ரஜினி தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து