பொது நவம்பர் 30,2020 | 13:41 IST
அரசியல் பிரவேசம் பற்றி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினி இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கூட்டம் 2 மணி நேரத்துக்கு நீடித்தது. 12 மணிக்கு கூட்டம் முடிந்ததும் மண்டபத்தின் பால்கனியில் இருந்து ரஜினி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி தராமல் வீட்டுக்கு ரஜினி சென்றார். கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என மன்ற நிர்வாகிகள் விளக்கினர். ரஜினி எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்றனர். பைட் ஸ்டாலின் மாவட்ட செயலாளர், தூத்துக்குடி இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் ரஜினி தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் மன்ற நிர்வாகிகள் கூறினர்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: