பொது டிசம்பர் 01,2020 | 12:10 IST
நிவர் புயலை தொடர்ந்து வங்கக் கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது, புரெவி புயலாக உருவெடுக்கும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் 11 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும்; துறைமுகங்கள் மற்றும் அங்கு நின்றிருக்கும் கப்பல்களுக்கு சூறைக்காற்றால் சேதம் ஏற்படக்கூடும் என்பதுதான் 3ம் எண் எச்சரிக்கை கூண்டின் அர்த்தம். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாசகர் கருத்து